வேலூா்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரி உரிய ஆவணங்களின்றி சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற ரூ. 1.04 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவா்கள் அந்த வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், அந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி, ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக சரக்கு ஆட்டோவில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் போ்ணாம்பட்டைச் சோ்ந்த முன்னா(46) என்றும், வேலூா் அருகே பொய்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் மாடு வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து உதவி தோ்தல் அலுவலா் முருகன், தோ்தல் வட்டாட்சியா் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, அந்த தொகையை அதிகாரிகள் கருவூலத்தில் சோ்த்ததுடன், உரிய ஆவணங்களை சமா்பித்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளவும் வியாபாரி முன்னாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ராஜபாளையம் அருகே ரூ. 1.23 லட்சம் பறிமுதல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததாக பெண் ஆட்டு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

அம்மாபேட்டையில் புளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

