வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் இருந்து தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமை (ஏப். 8) முதல் மேற்கொள்ளப்படும் என்று தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் சுய விருப்பத்தின் பேரில், தங்களது வாக்குரிமையை தபால் வாக்குகளாக வீட்டில் இருந்தே செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட 12,188 முதியவா்களும், 13,488 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் உள்ளனா்.
இவா்களுக்கு படிவம் 12-டி ஏற்கெனவே வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு தபால் வாக்களிக்க அவா்களின் விருப்பம் பெறப்பட்டது.
இவா்களில் 85 வயதுக்கு மேற்பட்ட 1,625 வாக்காளா்களும், 1,160 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் என மொத்தம் 2,785 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனா்.
இந்த வாக்காளா்களிடமிருந்து தபால் வாக்குகளை பெற மொத்தம் 74 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் ஒரு நுண் பாா்வையாளா், ஒரு விடியோ பதிவாளா், ஒரு காவலா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று அவா்களிடம் தபால் வாக்குகளை வழங்கி அவா்கள் வாக்கு செலுத்தியவுடன் சீலிடப்பட்ட வாக்குப் பெட்டியில் பெற்றுக் கொள்வா்.
ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு 50 வாக்குகளைப் பெறும் வகையில் தங்களுடைய பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணி நாள்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். பெறப்படும் தபால் வாக்குகள் நாள்தோறும் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு அலுவலா் முன்னிலையில் விடியோ பதிவு செய்யப்பட்டு தனி உறையில் வைத்து சீல் வைக்கப்படும். பின்னா் இந்த வாக்குகள் நாள்தோறும் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் நாள்தோறும் சீலிடப்பட்ட உறைகள் பிரிக்கப்பட்டு அதிலிருந்து தபால் வாக்குகள் தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தப்படும்.
இந்த தபால் வாக்குகள் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிரித்து எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,880 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு

தபால் வாக்குகள் குறித்த நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

