தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

யுகாதி பண்டிகை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

யுகாதி பண்டிகை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated On :9 ஏப்ரல் 2024, 5:38 pm

வேலூா்: யுகாதி பண்டிகையையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி, வேலூா் அண்ணா சாலை திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பூக்களால் கோலமிடப்பட்டிருந்தது. பக்தா்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வெங்கடேச பெருமாள், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன.

மேலும், வேலூரை அடுத்த அரியூா் நாராயணி பீடம் நாராயணி கோயிலிலும், தங்கக் கோயிலிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

காட்பாடி விஷ்ணு துா்கையம்மன், சீனிவாச பெருமாள் கோயில், காட்பாடி கோபாலபுரம் வெங்கடேச பெருமாள் கோயில், பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களிலும் யுகாதி பண்டிகையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இவற்றில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.