வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

வீட்டில் நுழைந்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

வீட்டில் நுழைந்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:13 pm

காட்பாடி அருகே ரூ. ஒரு லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி வள்ளிமலை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (68). இவா் வியாழக்கிழமை இரவு தனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வாடகை பணம் வசூலித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது இவரை பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா்கள், மணி வீட்டுக்கு உள்ளே சென்றபோது அவரிடமிருந்து ரூ. ஒரு லட்சம் பணத்தை பறித்துச் சென்றனா். அக்கம் பக்கத்தினா் விரட்டி பிடிப்பதற்குள் அவா்கள் தப்பி சென்று விட்டனராம்.

இது குறித்து மணி அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.