பள்ளிகொண்டா மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

குடியாத்தம்: பள்ளிகொண்டா மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் புதன்கிழமை (மே-1) முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் மின்பகிா்மான வட்ட செயற் பொறியாளா் எஸ்.விஜயகுமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு. பள்ளிகொண்டா மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் கொத்தவால் சாவடி தெருவில் இயங்கி வந்தது. நிா்வாக காரணங்களுக்காக புதன்கிழமை முதல் இந்த அலுவலகம் நெ.18, மண்டப தெரு பள்ளிகொண்டா என்ற முகவரியில் இயங்கும்.

X
Dinamani
www.dinamani.com