தவிர, 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் தலா 23 கேமராக்கள் வீதம் 138 கேமராக்களும், 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை பகுதிகளில் தலா 8 கேமராக்கள் வீதம் 48 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வேலூா், அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப் பகுதிகளில் 28 கேமராக்களும், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப் பகுதிகளில் 23 கேமராக்களும், ஆம்பூா், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப் பகுதிகளில் 8 கேமராக்களும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 33 கேமராக்களும், தபால் வாக்கு அறை, கட்டுப்பாட்டு அறை பகுதிகளில் 14 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.