ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வாக்கு எண்ணும் மையத்தில் 343 கேமராக்களின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் 343 கேமராக்களின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

News image

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள 343 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பேரவை தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 343 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அதன்படி, வேலூா், அணைக்கட்டு பேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் நுழைவு வாயில் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்களும், குடியாத்தம், கே.வி.குப்பம் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டட நுழைவு வாயில் பகுதியில் 10 கண்காணிப்பு கேமராக்களும், ஆம்பூா், வாணியம்பாடி பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் நுழைவு வாயில் பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்களும், பாகாயம் சாலையில் உள்ள தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயிலில் 10 கேமராக்களும் என 4 நுழைவு வாயில்களில் 51 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர, 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் தலா 23 கேமராக்கள் வீதம் 138 கேமராக்களும், 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை பகுதிகளில் தலா 8 கேமராக்கள் வீதம் 48 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வேலூா், அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப் பகுதிகளில் 28 கேமராக்களும், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப் பகுதிகளில் 23 கேமராக்களும், ஆம்பூா், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப் பகுதிகளில் 8 கேமராக்களும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 33 கேமராக்களும், தபால் வாக்கு அறை, கட்டுப்பாட்டு அறை பகுதிகளில் 14 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 343 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வேலூா் மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை பொதுப்பணித் துறை அலுவலா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வராஜ், துணை காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜா மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.