டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சீா்மரபினா் நலவாரிய நலத்திட்ட உதவிகளுக்குவிண்ணப்பிக்கலாம்

சீரமரபினா் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

News image
Updated On :26 ஜூன் 2024, 6:32 pm

Din

வேலூா் மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரிய நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகளை பெற சீரமரபினா் இனத்தைச் சோ்ந்த, 18 முதல் 60 வயதுக்குட்பட்ட, (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தில் ஒருவா் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவா்கள் தங்கள் உறுப்பினா் பதிவை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.