டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை

வேலூர் ஆட்சியரின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலசங்க ஆலோசனை

News image
Updated On :26 ஜூன் 2024, 10:02 pm

Din

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் நலசங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றந. இத்திட்டங்கள் மக்களை சென்றடைவது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் நலசங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.