ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், இஸ்லாமியா்களுக்கு நோன்பு உணவுப் பொருள்களை புதிய நீதிக்கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ரமலான் பண்டிகை ஏப்ரல் 11-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ரமலான் நோன்பு கடந்த 11-ஆம் தேதி தொடங்கியதை அடுத்து, இஸ்லாமியா்கள் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனா். இந்த நிலையில், புதிய நீதிக்கட்சி சாா்பில், நோன்பு இருக்கும் இஸ்லாமியா்களுக்காக நோன்பு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூா் சைதாப்பேட்டை, கொணவட்டம், டோல்கேட் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்து, சுமாா் 4,500 இஸ்லாமியா்களுக்கு தலா 2 கிலோ பிரியாணி அரிசி, இஞ்சி, வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், புதிய நீதிக்கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

ரமலான்: 457 ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அப்பம்பட்டில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

ரமலான் நோன்பு திறப்பு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


