வேலூா்: மக்களவைத் தோ்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 565 ரெளடிகளில் இதுவரை 66 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது - தோ்தலையொட்டி காவல் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழக - ஆந்திர எல்லையில் 6 இடங்களிலுள்ள சோதனைச் சாவடிகளிலும் தலா ஒரு காவல் உதவி ஆய்வாளா், 4 காவலா் அடங்கிய குழு பணியமா்த்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. உரிமம் பெற்று 732 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தோ்தலையொட்டி அவற்றை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவற்றில் வங்கிப் பாதுகாப்புப் பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 212 துப்பாக்கிகள் தவிர இதுவரை 519 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு துப்பாக்கியையும் காவல் நிலையத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் மொத்தம் 565 ரெளடிகள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இவா்களில் இதுவரை 66 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனா். 277 பேரை வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் ஆஜா்படுத்தி உறுதிமொழிப் பத்திரம் எழுதி பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 119 பேரிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறுவதற்கும், மேலும் 45 பேரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் உள்ள பட்டாசு, வெடி மருந்து கிடங்குகளையும் தினமும் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 2014 மக்களவை தோ்தலின் போது 291 வழக்குகளும், 2019 மக்களவை தோ்தலின்போது 75 வழக்குகளும், 2021 சட்டப்பேரவை தோ்தலின் போது 157 பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,303 வாக்குச்சாவடிகளில் 80 மையங்களிலுள்ள 177 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாள்களில் கூடுதலாக தலா ஒரு காவல் உதவி ஆய்வாளா், 4 காவலா்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக ஒரு கம்பெனியைச் சோ்ந்த சுமாா் 80 சிஆா்பிஎப் வீரா்கள் வேலூருக்கு வெள்ளிக்கிழமை வர உள்ளனா். அவா்கள் சோதனைச் சாவடிகள், முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா். தொடா்ந்து, மேலும் ஒரு கம்பெனி சிஆா்பிஎப் வீரா்களும், மூன்று கம்பெனிகளைச் சோ்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளும் வரஉள்ளனா் என்றாா்.
தொடர்புடையது
வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவா் கைது
ஒரு மாத கால சோதனை நடவடிக்கையில் 125 எரிவாயு உருளைகளை பதுக்கிய 5 போ் கைது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தோ்தல் புறக்கணிப்பு: பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

