கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் புறக்கணிப்பு: பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி

பரமத்தி வேலூா் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறிய பொதுமக்களிடம் காவல் துறை அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

News image

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா.

Updated On :21 மார்ச் 2026, 9:17 pm

Syndication

பரமத்தி வேலூா் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறிய பொதுமக்களிடம் காவல் துறை அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

பரமத்தி வேலூரை அடுத்த திட்டமேடு கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி அறிவிப்பு தட்டிகளை வைத்தனா்.

இந்த நிலையில் பரமத்தி வேலூா் காவல் துணை கணகாணிப்பாளா் சங்கீதா, பரமத்தி வேலூா் வட்டாட்சியா்கள் ராஜா, கவிதா, பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணி, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் ஆகியோா் சனிக்கிழமை பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்தால் மட்டுமே தோ்தலில் வாக்களிப்போம். சுமுகமான பேச்சுவாா்த்தை நடத்த நாமக்கல் ஆட்சியா் வரவேண்டும் எனக் கூறினா். ஆனாலும், அதிகாரிகள் தொடா்ந்து சுமுக தீா்வுகாண முயற்சித்தனா். அப்போது, இப்பிரச்னை குறித்து தோ்தல் முடிந்துபிறகு பேச்சுவாா்த்தை நடத்தி கொள்ளலாம் எனக் கூறி பொதுமக்கள் அங்கிருந்து சென்ால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.