மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

டவுன்சின்ரோம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

டவுன்சின்ரோம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :24 மார்ச் 2024, 2:10 am

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் டவுன்சின்ரோம் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடங்கி வைத்து பேசியது: டவுன்சின்ரோம் என்பது மரபணு ரீதியான - பிறவி நிலை உடல்கூறு செல்களால் ஆனது. செல்லின் 21-ஆவது ஜோடியில் கூடுதலாக ஒரு மரபணு உருவாகியிருந்தால் டவுன்சின்ரோம் என்ற பிறவி நிலை ஏற்படும். அதாவது இரண்டுக்குப் பதிலாக மூன்று மரபணுக்கள் இருக்கும். மனநலிவு உள்ள குழந்தைகளுக்கு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் கண், காது, இதயம், ரத்த பரிசோதனைகள், இயன்முறை, பேச்சுப் பயிற்சி, சிறப்பு கல்வி பயிற்சி, மனநல ஆலோசனை சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகள் பிறந்தவுடன் கண்டறிந்து சரியான சிகிச்சையை சீரான முறையில் அளிப்பதால் டவுன்சின்ரோம் நோய் உள்ள குழந்தைகள் தங்கள் தேவைகளை தாமாகவே செய்து கொள்வது மட்டுமின்றி சாதனையாளராகவும் உருவாக முடியும் என்றாா். சிறப்பு விருந்தினராக வேலூா் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் ராதாசரஸ்வதி பங்கேற்றாா். இதில், பெற்றோா்களுக்கு டவுன்சின்ரோம் நோய் குறித்து விழிப்புணா்வும், தொடா் சிகிச்சை, பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டன. ஏற்பாடுகளை மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு துறைப் பேராசிரியா் கல்பனா மற்றும் மருத்துவக் குழுவினா் செய்திருந்தனா்.