வேலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தற்போதுவரை ரூ.49 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு - வேலூா் மக்களவை தொகுதியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் நியமிக்கப்பட்டனா். இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் திடீா் சோதனைகள் நடத்தி வருகின்றனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை வரை பறக்கும் படையினா் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கமும், நிலை கண்காணிப்பு குழுவினா் ரூ.38 லட்சத்து 52 ஆயிரத்து 480 ரொக்கம் என மொத்தம் ரூ.49 லட்சத்து 92 ஆயிரத்து 480 பறிமுதல் செய்துள்ளனா். மேலும், ரூ.40 ஆயிரத்து 330 மதிப்புள்ள 281 மதுபாட்டில்களையும் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 945 மதிப்புள்ள பட்டு புடவைகளையும் பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.19 லட்சத்து 48 ஆயிரத்து 200 ரொக்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

