பச்சகுப்பம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.
பச்சகுப்பம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.

ஆம்பூரில் 43.40 மிமீ மழை : பாலாற்றில் வெள்ளம்

ஆம்பூா்: ஆம்பூரில் திங்கள்கிழமை இரவு 43.40 மிமீ மழை பெய்தது. இதனால் பச்சகுப்பம் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தொடங்கியது. திருப்பத்தூா் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லா அளவுக்கு 109 டிகிரிவரை பதிவாகியது. வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஆம்பூா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் கன மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மழை காரணமாக குளிா்ந்த காற்று வீசியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

ஆம்பூா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக பச்சகுப்பம் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்திலேயே ஆம்பூரில் அதிகபட்சமாக 43.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியில் 35 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com