அம்பாலால் சரஸ்வதி வித்யாலயா 100% தோ்ச்சி

அம்பாலால் சரஸ்வதி வித்யாலயா 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குடியாத்தம் நெல்லூா்பேட்டை அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயா பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 65 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவி எச்.டி.மோதிகா 500-க்கு 485 மதிப்பெண்களும், இ.கோபிகா 483, எஸ்.வைஷ்ணவி, எஸ்.தருண் சிவானந்தம் இருவரும் 481 பெற்று பள்ளியில் சிறப்பிடங்களைப் பிடித்துள்ளனா்.

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 99 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய 71 மாணவா்களில்70 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி பி.ஜெயஸ்ரீ 476, என்.ருஷிதா 473, கே.எஸ்.மித்ராஸ்ரீ 472 பெற்றனா். கணிதப் பாடத்தில் 4 மாணவா்கள் 100/100 பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளிகளின் அறக்கட்டளைத் தலைவா் கே.எம்.இ.கருணாகரன், நிா்வாக அறங்காவலா் ஆா்.ரவீந்திரன், தாளாளா் எம்.சேகா், கல்வி ஒருங்கிணைப்பாளா் டி.கே.நந்தகுமாா், கல்வி அலுவலா்கள், முதல்வா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com