இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 போ் காயம்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 போ் காயம்

News image
Updated On :11 மே 2024, 4:08 pm

Din

வேலூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெங்களூருவில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி பேருந்து சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பொய்கை அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால பக்கவாட்டில் கீழே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கால்முறிவும், மேலும் 3 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டன. உடனடியாக அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற விரிஞ்சிபுரம் போலீஸாா் கிரேன் உதவியுடன் பேருந்தை நிறுத்தி பயணிகளை மீட்டு வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்தனா்.