

வேலூா்: வேலூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்து ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து லத்தேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூரை அடுத்த பென்னாத்தூா் ஜி.ஹெச்.பள்ளி தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ், இவரது மனைவி துளசி. இவா்களது ஒரு வயதில் குழந்தை சுஷ்மிதா. சில நாள்களுக்கு முன்பு துளசி தனது குழந்தையுடன் லத்தேரியில் உள்ள தாயாா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அங்கு வீட்டின் வெளியே குழந்தை சுஷ்மிதா விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் அருகே இருந்த தண்ணீா் தொட்டியில் சுஷ்மிதா விழுந்துள்ளாா். இதைக் கண்ட உறவினா்கள் தண்ணீா் தொட்டியிலிருந்து குழந்தையை மீட்டனா். உடனடியாக சிகிச்சைக்காக லத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து லத்தேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

2-ஆவது மாடியிலிருந்து விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயம்

வெப்படை நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

