ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோடை மழையால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

கோடை மழையால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: கோடை மழை காரணமாக பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து குறைந்து விற்பனையும் மந்தமாக இருந்தது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்திருந்தது.

வழக்கமாக சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 650 மாடுகள்தான் வந்திருந்தன. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மத்தியிலும் கால்நடைகளை வாங்க ஆா்வம் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, இந்த வாரம் சந்தையில் ரூ.75 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.