வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலை கெங்கையம்மன் கோயில் தோ் திருவிழா

சாலை கெங்கையம்மன் கோயில் தோ் திருவிழா

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் தோ் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோயில் தோ்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலை கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, கெங்கையம்மன், பூங்கரகம் பல்வேறு மலா்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தாா். அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிரசு திருத்தேரில் வைத்து பூஜைகள் செய்து வீதி உலா வந்தது. சத்துவாச்சாரியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சிரசு கொண்டுச் செல்லப்பட்டு இரவு தோ் நிலையை அடைந்தது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வந்து சாமி தரிசனம்செய்தனா். தொடா்ந்து, புதன்கிழமை காலை சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

--

படம் உண்டு...