கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி: வியாபாரிகள் சாலை மறியல்

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி: வியாபாரிகள் சாலை மறியல்

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூா் பழைய பைபாஸ் சாலையில் புதை சாக்கடைப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டியும், பணிகளை விரைவுபடுத்தி முடிக்கக்கோரியும் அப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சியில் சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பில் பொலிவுறு நகர திட்டப்பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இன்னும் பல பகுதிகளில் புதை சாக்கடை பணிகள் முடிக்கப்படாததால், சாலைகளும் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீா் தேங்குவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதன்படி, வேலூா் பழைய பைபாஸ் சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடை திட்டப்பணி தொடங்கப்பட்டது. இந்த பணி காரணமாக அந்த சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து, புதை சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பழைய பைபாஸ் சாலையில் புதை சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி 6 மாதமாகியும் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும்போது புழுதி கிளம்பி வியாபாரிகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனா்.

மேலும் குண்டும் குழியுமான சாலைகளால் வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். சாலை மூடப்பட்டுள்ளதால் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிப்புடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழைய பைபாஸ் சாலை புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸாா், சமாதானம் செய்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் 20 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.