கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

பொன்னேரி நகராட்சியில் ரூ.63 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

News image

மு.க.ஸ்டாலின்

Updated On :5 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி நகராட்சியில் ரூ.63 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 2019-ம் ஆண்டு மாா்ச் மாதம் புதை சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 5 வாா்டுகளை தவிா்த்து 22 வாா்டுகளில் 41 கி.மீ தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வந்தது.

கடந்த 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவு பெற்றது.

புதை சாக்கடை திட்ட பணிகள் முடிந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலை இருந்தது.

இந்த நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக ரூ.63 கோடியில் அமைக்கப்பட்ட புதை சாக்கடை சுத்திகரிப்பு நீா் வெளியேற்றும் நிலையத்தையும் திறந்து வைத்தாா்.

இதனையடுத்து பொன்னேரி நகராட்சி பாலாஜி நகா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளில் இருந்து புதை சாக்கடை குழாய்களுக்கு இணைப்பு வழங்கும் பணியை குடிநீா் வடிகால் மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.