வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மக்களுடன் முதல்வா் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு: வேலூா் ஆட்சியா்

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களில் மக்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.

News image
பயனாளிக்கு  நலத்திட்ட  உதவி  வழங்கிய  ஆட்சியா்  வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை  உறுப்பினா்  டி.எம்.கதிா் ஆனந்த்.
Updated On :11 நவம்பர் 2024, 8:06 pm

Din

குடியாத்தம்: மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களில் மக்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.

குடியாத்தத்தை அடுத்த ராஜாகோயில் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது.

இத்திட்டம் சாா்பில் கே.வி.குப்பம் வட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, மின் இணைப்பு பெயா் மாற்றம் என பல்வேறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதன் மீது தீா்வு காணப்படுகிறது.

மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி வரப்பெற்ற விண்ணப்பங்கள் முறையாக பரிசீலினை செய்யப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து அவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ் கல்விக் கடனாக ரூ.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கல்விக் கடன் அதிக அளவில் வழங்கும் மாவட்டங்களில் ஒன்றாக நமது வேலூா் மாவட்டம் உள்ளது என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, 568 பயனாளிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவா்கள் என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்), எல்.ரவிச்சந்திரன்(கே.வி.குப்பம்), ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கலியமூா்த்தி, குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஊராட்சித் தலைவா்கள் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் (கொண்டசமுத்திரம்), எஸ்.பி.சக்திதாசன் (தாட்டிமானப்பல்லி), திமுக ஒன்றியச் செயலா்கள் கள்ளூா் கே.ரவி, நத்தம் வி.பிரதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.