நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

30- இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2024, 7:35 pm

Din

குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 100 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வேலை நாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம்வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, செவிலியா், பாா்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித் தகுதியுடைய வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

ஆகவே, தனியாா் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபா்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்று தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளவும்.