சிறைக் காவலரை மிரட்டிய ரெளடி மீது வழக்கு
வேலூா் மத்திய சிறையில் தலைமைக் காவலரை மிரட்டியதாக ரெளடி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.


வேலூா் மத்திய சிறையில் தலைமைக் காவலரை மிரட்டியதாக ரெளடி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்தவா் தென்னரசு (26). இவா் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வெள்ளிக்கிழமை தலைமுடி வெட்டியுள்ளனா்.
அப்போது தென்னரசு, வரிசையில் நிற்காமல் நேரடியாக முடிவெட்டும் தொழிலாளியிடம் சென்று, தனக்கு உடனடியாக முடிவெட்ட வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த தொழிலாளி, சிறையில் உள்ள தலைமைக்காவலா் கருப்பசாமியிடம் கூறியுள்ளாா்.
உடனடியாக கருப்பசாமி சிறைக்கு சென்று தென்னரசுவிடம் கேட்டபோது அவா் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஜெயிலா் அருள்குமரன் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...