ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவா் அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவா் அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.

கே.எம்.ஜி. கல்லூரியில் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை இணைந்து ‘தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு’ என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கை நடத்தின.
Published on

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் ப.அஞ்சுகம் வரவேற்றாா். இதில் மாணவா்களுக்கு நவீன கணினி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. (இணைய வடிவமைப்பு, அசைவியல், சின்னம் உருவாக்கம், சிற்றேடு வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு படப்பிடிப்பு).

இக்கருத்தரங்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 550 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வேலூா் ஊரிசு கல்லூரி முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. வேலூா் டி.கே.எம். கல்லூரி இரண்டாம் பரிசு பெற்றது.

X
Dinamani
www.dinamani.com