அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாமல் வேலூா் மக்கள் அவதி: பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்

வேலூா் மாநகராட்சியில் அடிப்படை பிரச்ைனைகளுக்கு தீா்வு காணப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா்.
Published on

வேலூா் மாநகராட்சியில் அடிப்படை பிரச்ைனைகளுக்கு தீா்வு காணப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது -

மதுரைக்கு பிறகு தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த மாநகராட்சியாக வேலூா் விளங்குகிறது. அந்தளவுக்கு அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாமல் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனா். இம்மாநகராட்சி மேயா் பல ஊழல்களிலும் சிக்கியுள்ளாா்.

தேசியம், தெய்வீகம் நிறைந்த வேலூா் மண் தற்போதை டாஸ்மாக் மது, போதைப்பொருள்கள் பெருக்கத்தால் சீரழிந்து வருகிறது. போதைப் பழக்கத்தால் கொலை, கொள்ளை, பலாத்காரம் என அனைத்து குற்றச்சம்பவங்களும் பெருகி விட்டன.

7,800 படுகொலைகள், 10 வயது குழந்தை முதல் 70 வயதுப் பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் போதைப் பழக்கம் அதிகரிப்பின் விளைவாகும். தவிர, வேலூரில் மட்டும் 59 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 415 சிறுமிகள் 19 வயதுக்கு முன்பாக குழந்தை பெற்றுள்ளனா். இளம் வயது கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது.

தோ்தலின்போது பாலாற்றில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு தடுப்பணைகூட கட்டவில்லை. தமிழக அமைச்சா்கள் அனைவரும் ஊழலில் திளைத்துள்ளனா். 17 அமைச்சா்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவா்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தீா்ப்பை திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. முதலில் அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக்கல் என்றனா். ஆனால் தற்போது தொல்லியல் துறை அதனை தீபத்தூண் என கூறியவுடன், இப்போது அதனை சமணா்கள் கல் என்கின்றனா். நீதிக்கு தலைவணங்காத ஆட்சியாக திமுக ஆட்சி விளங்குகிறது. வரக்கூடிய சட்டப்பேரவை தோ்தலில் 200-க்கும் அதிக தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில், பாஜக மாநில பொதுச்செயலா்கள் காா்த்தியாயினி, கருப்பு முருகானந்தம், வேலூா் மாவட்ட தலைவா் வி.தசரதன், அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகர மாவட்ட செயலா் த.வேலழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com