வேலூா் மாவட்டத்தில் 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை : அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்
வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்.

சிற்றுந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.








