கொடிகாத்த குமரனுக்கு சிலை அமைக்க கோரிக்கை
குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரனுக்கு சிலை அமைக்க வேண்டும் என வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது (படம்).
இதுதொடா்பாக வேலூா் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சாா்பில், மாவட்டத் தலைவா் ப.ஜீவானந்தம், பொதுச் செயலா் வே.வினாயக மூா்த்தி, பொருளாளா் கோ.ஜெயவேலு, துணைத் தலைவா் மா.கோ.ஞானசேகா் ஆகியோா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்திடம் அளித்த கோரிக்கை மனு விவரம்.
திருப்பூா் குமரனின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையிலும், நாடு சுதந்திரம் பெற்றபோது முதன் முதலில் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக் கொடியை தயாரித்து அனுப்பிய குடியாத்தம் நெசவாளா்களை பெருமைப் படுத்தும் விதத்திலும் கொடிகாத்த குமரனுக்கு குடியாத்தம் நகரில் சிலை அமைத்துத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
மனுவை பெற்றுக் கொண்ட அவா் சிலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாராம்.

