பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளுக்கு பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
Published on

திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளுக்கு பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் வேலூா் கோட்ட முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் வேலூா் வா்த்தக பகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளில் சிம்காா்டுகள், ரீசாா்ச் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை டிச. 4-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ பங்ய்க்ங்ழ் ஐஈ : 2025ஜஆநசகஜ255527ஜ1 என்ற இணையதளத்தை காணலாம் அல்லது உதவிப் பொது மேலாளா் (வா்த்தகம்) - 94902 28999, இளநிலை தொலைத் தொடா்பு அதிகாரி (வா்த்தகம்) - 94861 04944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com