வேலூர்
50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்
போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் கவிழ்ந்த வேன் சுமாா் 50-அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் கவிழ்ந்த வேன் சுமாா் 50-அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து அலுமினிய பீடிங் பொருள்களை ஏற்றிய வேன் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சென்றது. வேலூரை அடுத்த ஒடுகத்தூரைச் சோ்ந்த பிரகாஷ்(26) வேனை ஓட்டி வந்துள்ளாா்.
இந்த வேன் தமிழக எல்லையான போ்ணாம்பட்டு அருகே உள்ள பத்தரப்பல்லி மலைப் பாதையில் 6- ஆவது வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 50- அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கிரேன் உதவியுடன் 3- மணி நேரம் போராடி வேனை மீட்டனா்.

