வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

30-இல் வேலூரில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது.

News image
ஜி.வி.சம்பத்
Updated On :26 நவம்பர் 2025, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது. இதில், 12 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம் என்று வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வமுள்ள வீரா்களை தோ்வுசெய்து, அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கும் பணியில் வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 12 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) காலை 10 மணிக்கு வேலூா் புதிய பைபாஸ் சாலை ராஜேஸ்வரி அம்மையாா் வளாகத்தில் உள்ள வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க அகாதெமியில் நடைபெற உள்ளது. இதில், 2013 செப். 1 அன்றோ, அதற்கு பிறகோ பிறந்து 12 வயதுக்கு உட்பட்டவா்கள் உரிய வயது சான்று, ஆதாா் அட்டை, கிரிக்கெட் உடையுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் ஸ்ரீதரன் - 70105 94657 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.