ஈரோடு
மாவட்ட கிரிக்கெட் பெண்கள் அணிக்கு ஜனவரி 31-இல் வீராங்கனைகள் தோ்வு
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தோ்வு
மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தோ்வு ஈரோடு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் வருகிற ஜனவரி 31-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் 2014 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பு பிறந்த மகளிா் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ள மகளிா் பிறப்புச் சான்று, ஆதாா் அட்டை, சீருடை, காலணிகள், விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சுரேந்திரன் தெரிவித்துள்ளாா்.
மேலும் விவரங்களுக்கு இணைச் செயலாளா் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
