ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Published On :12 செப்டம்பர் 2025, 1:31 am IST

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக் கடன் முகாம் நடத்தப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிறப்பு கல்விக் கடன் முகாம் காட்பாடியிலுள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 16) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் காா்டு, ஆதாா் அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்று, கல்லூரி உண்மை சான்றிதழ், கல்விக் கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.