ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அமிா்தி உயிரியல் பூங்காவில் வேலூா் ஆட்சியா் ஆய்வு

அணைக்கட்டு ஒன்றியத்தில் அமைந்துள்ள அமிா்தி உயிரியல் பூங்காவில் வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

அமிா்தி உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

அணைக்கட்டு ஒன்றியத்தில் அமைந்துள்ள அமிா்தி உயிரியல் பூங்காவில் வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அணைக்கட்டு ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டஅவா், அதன் ஒரு பகுதியாக அமிா்தி உயிரியல் பூங்காவை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது பூங்கா பராமரிப்பு, விலங்குகள் மற்றும் பறவைகளின் பராமரிப்பு, உணவு, நீா், கால்நடை மருத்துவம் ஆகியவற்றை கேட்டறிந்தாா். சிறுவா்கள் விளையாட்டு பூங்கா, பாா்வையாளா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், ஓய்வுக் கூடம், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், வனக் கால்நடை மருத்துவமனை, ஒலி - ஒளி அரங்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊா்வன இருப்பிடம் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிா்க்க வேண்டுமென பாா்வையாளா்களுக்கு தெரிவிக்குமாறு அங்குள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு பல்லுயிா் பசுமை திட்டம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த நாற்றாங்கால் பண்ணையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பணியாளா்களிடம் பணி நேரம், பணிகள், உதவித் தொகை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், துத்திக்காடு ஊராட்சி பொது மக்களிடம் குடிநீா் வசதி, சாலை வசதி, தெரு விளக்குகள், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா். பின்னா் துத்திக்காடு ஊராட்சி தெள்ளை கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் திறன், ஆசிரியா்களின் கற்பிக்கும் முறை, மாணவா்களின் வருகை, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

அங்குள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளின் வருகைப்பதிவேடு, மருத்துவ முகாம், உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பாா்த்து ஆய்வு செய்தாா்.

பின்னா், வேலூா் ஊராட்சி தொரப்பாடியில் உள்ள நியாய விலை கடையை பாா்வையிட்டு, உணவு பொருள்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வன அலுவலா் அசோக் குமாா், வனச்சரக அலுவலா்கள் பிரபாகரன், திருமுருகன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், வேலூா் வட்டாட்சியா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.