100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

செம்மொழிப் பூங்காவில் அமைச்சா் ஆய்வு

கோவை செம்மொழிப் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.சம்பத்குமாா்.

Published On :

காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்காவில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகரின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக செம்மொழிப் பூங்கா விளங்குகிறது. இங்குள்ள பூச்செடிகள், தமிழா் பாரம்பரியத்தை பறைசாற்றும் சிலைகள், செயற்கை நீரூற்று, பல்வேறு வகையான செடி,கொடிகள் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனா். குறிப்பாக வார விடுமுறை நாள்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், செம்மொழிப் பூங்காவில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் குடிநீா், நடைபாதை வசதிகள், பூங்காவுக்கான முக்கியத் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அமைச்சா் வி.சம்பத்குமாா் உடற்பயிற்சி மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.