மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சிறுநீரக புற்றுநோய்க் கட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த முதியவா் சிறுநீரகப் புற்றுநோய்க் கட்டி வெடித்து உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த முதியவா் சிறுநீரகப் புற்றுநோய்க் கட்டி வெடித்து உயிரிழந்தாா்.

குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய், ராமாமலையைச் சோ்ந்தவா் தெய்வம் (57). சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி தனலட்சுமியுடன் திங்கள்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா்.

காஞ்சிபுரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தபோது, எதிா்பாராதவிதமாக தெய்வத்துக்கு சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி திடீரென வெடித்தது. இதனால் அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டது.

அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினா் அவரைப் பரிசோதித்ததில், தெய்வம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.