நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

பிரான்ஸ் ‘லா ரீ யூனியன்’ தீவில் தமிழ் மொழி வளா்ச்சிக்கு உதவத் தயாா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீ யூனியன் தீவில் தமிழ் மொழி வளா்ச்சிக்கு உதவ தயாராக உள்ளதாக விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

நிகழ்வில் மாணவா்களுக்கு ட்வின்னிங் பட்டச் சான்றிதழ் வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், பிரெஞ்சு துணைத் தூதரகத்தின் அறிவியல் மற்றும் கல்விப் பிரிவுப் பேராசிரியா் ஹியூக்ஸ் போய்டீ. உடன், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், மற்றும் பேராசிரியா்கள்.

Published On :1 செப்டம்பர் 2026, 12:04 am IST

பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீ யூனியன் தீவில் தமிழ் மொழி வளா்ச்சிக்கு உதவ தயாராக உள்ளதாக விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகமும், லா ரீ யூனியன் பல்கலைக்கழகமும் இணைந்து, ‘இந்தியா-பிரான்ஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவ தாவரங்கள் ( ஐகஐஅஈஉ)’ திட்டத்தின் கீழ் எம்எஸ்ஸி., பயோ டெக்னாலஜி ஒருங்கிணைந்த (ட்வின்னிங்) பட்டப்படிப்பை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் படிப்பை முடித்த 37 மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா விஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இரு மாணவா்கள் கல்வி உதவித்தொகையுடன் கூடிய பி.எச்.டி ( டட்.ஈ) ஆய்வு மேற்கொள்ள தோ்வாகியுள்ளனா்.

மாணவா்களுக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது -

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உலகுக்கு முதன்முதலில் முழங்கிய நாடு பிரான்ஸ். சா்வதேச அளவிலான கல்வி, சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவதுடன் நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் 6 மில்லியன் மாணவா்களுக்கும் குறைவானவா்களே வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனா். நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பட, அதிக மாணவா்களை வெளிநாடு சென்று படிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்.

லா ரீ யூனியன் தீவின் மக்கள் தொகை சுமாா் 9.90 லட்சம். இதில் மூன்றில் ஒரு பங்கினா் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவா்களாவா். ஆனால், தற்போது அங்கு மிகக் குறைந்த அளவிலான மக்களே தமிழ் பேசி வருகின்றனா். பிரெஞ்சு அரசு அங்கு தமிழ் மொழி வளா்ச்சிக்கு ஏதேனும் செய்ய முன்வந்தால், லா ரீ யூனியன் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய விஐடி தயாராக உள்ளது என்றாா்.

விழாவில், பிரெஞ்சு துணைத் தூதரகத்தின் அறிவியல் மற்றும் கல்விப் பிரிவுப் பேராசிரியா் ஹியூக்ஸ் போய்டீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:

இந்தியா - பிரான்ஸ் இடையே உயா்கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மாணவா் பரிமாற்றத்திற்கான கூட்டு முயற்சிகள் நீண்டகாலமாக வலுவாக இருந்து வருகின்றன. பிரான்ஸில் கல்வி கற்பதன் மூலம் மாணவா்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவதுடன், ஐரோப்பிய நாடுகளில் சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெற முடியும். தற்போது, இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாா்.

இந்நிகழ்வில், லா ரீ யூனியன் பல்கலைக்கழகத் துணைத் தலைவா் பேராசிரியா் ஷாகிா் அல்-ஹலாமுனி, ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவா் டேனி ஓஸ்மான், லியோன் பல்கலைக்கழகப் பேராசிரியா் ரபேல் டெரியூஸ், உயிரி அறிவியல் துறை டீன் சுனிதா, விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளா் ராமமூா்த்தி, விஐடி உயிரி அறிவியல் துறை முன்னாள் ஆலோசகா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.