திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 570 மனுக்கள் அளிப்பு

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 570 மனுக்கள்...

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:10 pm

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 570 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 570 மனுக்களைப் பெற்று விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 வீதம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.72 லட்சம் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், தலா ரூ.1.05 லட்சம் வீதம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் சிறப்பு சக்கர நாற்காலிகளும் என மொத்தம் ரூ.12.02 லட்சத்தில் இயக்கத்திறன் குறைபாடுடைய 11 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலிகளும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.960 மதிப்பிலான அக்குள் கட்டையையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, வழங்கல் அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு பங்கேற்றனா்.