தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

வேலூரில் நகை மதிப்பீட்டாளா் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.

News image
கொலை
Updated On :25 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் நகை மதிப்பீட்டாளா் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் அரசமரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் யோகானந்தம் (63). சத்துவாச்சாரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு யோகானந்தம் வழக்கம்போல் தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளாா். புதன்கிழமை பாா்த்தபோது அவா் சடலமாக கிடந்துள்ளாா். அவரது முகத்தில் காயங்கள் இருந்துள்ளது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் வேலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து யோகானந்தத்தின் மனைவி, மகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணையில், யோகானந்தத்துக்கும், அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த குடும்பத்தினா், யோகானந்தத்தை தாக்கியிருப்பதும், இதில் பலத்த காயமடைந்த யோகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.