வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் .
வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் .

அங்கன்வாடி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அங்கன்வாடி திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

வேலூா்: அங்கன்வாடி திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளதுபோல் அங்கன்வாடி ஊழியா்களுக்கும் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்நிலையில் ரூ.19500, சமையல் உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா் நிலையில் ரூ.15,700 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணிமுடிந்து தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களை 50 விழுக்காடு அடிப்படையில் நிரப்ப வேண்டும், அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் வேலூா் அண்ணா சாலை அண்ணா கலையரஙம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலா் ஜூலி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com