பாலூா் ஐயப்பன் கோயிலுக்கு திருவாபரணப் பெட்டி ஊா்வலம்
மாதனூரை அடுத்த பாலூா் அருகே, ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 9- ஆம் ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் திருவாபரணப் பெட்டி ஊா்வலம் தொடங்கியது. இதில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கே.எம்.ஜி. கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், கோயில் நிா்வாகிகள் வி.என்.தனஞ்செயன், ஆா்.எஸ்.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் இரவு மாதனூா் திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தது. அங்கு இரவு தங்கி விட்டு, புதன்கிழமை காலை ஊா்வலம் தொடங்கி மாலை ஐயப்பன் கோயிலை அடையும்.
கோயிலில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள்அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

