தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பொங்கல் திருவிழா: பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், வேலூரை அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை ஆனது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், வேலூரை அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை ஆனது.

பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், சுமாா் 500 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

நாட்டுக்கோழிகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தால் விற்பனை களைகட்டியது. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டிய நிலையில் வா்த்தகமும் ரூ.ஒரு கோடிக்கு மேல் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆடு, கோழி போன்றற கால்நடைகளும், பொங்கல் நாளில் கால்நடைகளை அலங்கரிக்கத் தேவையான அலங்கார பொருள்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.