பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On :23 ஜனவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் 18 வயது முடிந்த அனைவரும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவது, அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி விழிப்புணா்வு பேரணிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றாா். இந்த பேரணியில் காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி வந்தனா். பேரணி காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி சித்தூா் பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.

இதில், காட்பாடி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியருமான மாறன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, உதவி வாக்காளா் பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான ஜெகதீஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதி ஏற்பு நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.