அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்வில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கல்லூரி முதல்வா் பால் ஜெயகா், வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், மாணவா்கள் உள்ளிட்டோா்.
மதுரை
அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியா் வழிகாட்டுதலின்பேரில் அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், அமெரிக்கன் கல்லூரி முதல்வரும் செயலருமான பால் ஜெயகா் கலந்து கொண்டு, வாக்களிப்பதின் முக்கியத்துவம், ஜனநாயகக் கடமையின் இன்றியமையாமை, ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாக்களிப்பு மாண்பையும் எடுத்துரைத்தனா். பின்னா், 16-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வை தமிழ்த் துறை (இளநிலை) தலைவா் பெ. ஹென்றி ஜூலியஸ் ஒருங்கிணைத்தாா். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

