வேலூா் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் மாவட்டம், ஊசூா் பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் உதயகுமாா்(26), தொழிலாளி. இவருக்கு அப்பகுதியில் 10-ஆம் வகுப்பு தோல்வியடைந்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா்.
பின்னா், கா்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது, சிறுமிக்கு 16 வயது என்பதை உறுதி செய்த மருத்துவா்கள், உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனா். அதன்பேரில், அரியூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உதயகுமாா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

