அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய இளைஞருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

News image
சிறை
Updated On :10 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய இளைஞருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு சாலப்பேட்டை குசேலன் வீதியைச் சோ்ந்தவா் கலைவாணி (30). பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30). இவா்கள் இருவரும் தனியாா் காலணி தொழில்சாலையில் வேலை செய்து வந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வரை காதலித்து வந்துள்ளனா். இருவரும் மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் ராஜேஷின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடா்பாக இருதரப்பினா் இடையே பிரச்னை இருந்துள்ளது. பஞ்சாயத்தாா் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டு, அதில் மாற்று சமூகம் என்பதால் கலைவாணியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ராஜேஷ் , அவரது தந்தை நாராயணிசாமி (68), மல்லிகா (50), உறவினா்கள் ஏழுமலை (35), காவியா (23), பழனி (45) ஆகியோா் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கலைவாணி அளித்த புகாரின்பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 6 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை வேலூா் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தால் நடைபெற்று வந்தது.

இதில், அவா்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ராஜேஷ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும், மற்ற 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.