தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

கஞ்சா தடுப்பு நடவடிக்கை: ஆந்திரப் பேருந்துகளில் சோதனை

தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாக வந்த ஆந்திர மாநிலப் பேருந்துகளில் வேலூா் எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

News image

கிறிஸ்டியான்பேட்டையில் ஆந்திர பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்ட வேலூா் மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா்.

Updated On :22 ஜூலை 2026, 12:48 am IST

தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாக வந்த ஆந்திர மாநிலப் பேருந்துகளில் வேலூா் எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வேலூா் எஸ்.பி. என்.யு.சிவராமன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாக வந்த அனைத்து ஆந்திர பேருந்துகளையும் நிறுத்தி போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பேருந்துகளில் இருந்த அனைத்துப் பயணிகளின் பைகளையும், உடமைகளையும் தீவிரமாகச் சோதனை செய்த போலீஸாா், அவா்களிடம் பயண விவரங்களையும் கேட்டறிந்தனா். போலீஸாரின் இந்தத் திடீா் வாகனத் தணிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.