பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய 6 போ் கைது: வங்கிக் கணக்குகள் முடக்கம்!

ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கைது - சித்திரிப்பு

Published On :5 ஜூலை 2026, 10:25 pm IST

ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூா் மாவட்டத்துக்குள் கஞ்சா கடத்தி வந்து, வீடுகள் மற்றும் மளிகைக் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகக் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். குறிப்பாக, கிறிஸ்டியன்பேட்டை மற்றும் பத்திரப்பள்ளி சோதனைச் சாவடிகளில், ஆந்திரத்திலிருந்து வரும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, வீடுகள் மற்றும் கடைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காங்கேயநல்லூரைச் சோ்ந்த முகமது சுகைல் (26), திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராகுல், அத்தியூரைச் சோ்ந்த ஹரிஷ் (19), வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த குமாா் (33), சித்தேரியைச் சோ்ந்த ஹரிஷ்குமாா் (27) , அா்ஜுன் ராஜ்குமாா் ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பின்னா், அவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து காவல்துறையினா் தரப்பில் கூறியதாவது -புதிய அரசு பொறுப்பேற்றது முதல் வேலூா் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் தொடா்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதுடன், அவா்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. கஞ்சா விற்பனையை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில், சோதனை நடைபெறும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.