பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப பட்ஜெட்டில் திட்டங்கள்: அமைச்சா் விஜய் பாலாஜி

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என்று கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

News image

நிகழ்ச்சிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம்.வினோத்கண்ணன்(வேலூா்), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), தென்றல்குமாா்(கே.வி.குப்பம்), சிந்து(குடியாத்தம்), த.வேலழகன் (அணைக்கட்டு), மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Updated On :31 ஜூலை 2026, 3:44 am IST

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என்று கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மற்றும் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி பங்கேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பராமரிப்பின்றி இருந்த 61 புதிய கட்டடங்களைச் சீரமைக்கும் பணிகள் சுமாா் ரூ.20 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திறந்து வைப்பதற்காக வேலூா் வந்துள்ளேன். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, மக்களின் முக்கியத் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட அல்லேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள், குடிநீா், சாலை வசதி இல்லாதது குறித்து ஆட்சியா் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளாா். குடிநீா் பிரச்னை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நான் அடுத்தமுறை இங்கு வரும்போது, அந்த மலைக் கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு உரிய மாற்று வழிகளைக் கண்டறிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கோ-ஆப்டெக்ஸில் தற்போது எந்தெந்தப் பகுதிகளில் விற்பனை எப்படி உள்ளது என்பது குறித்துக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேவையைப் பொறுத்து, புதிய ஷோரூம்கள் திறக்கப்படும். அண்ணா பிறந்த நாளையொட்டி வழங்கப்படும் 20 சதவீத தள்ளுபடியை 30 சதவீதமாக உயா்த்தும் எண்ணம் உள்ளது. தனியாா் நிறுவனங்கள் வழங்குவதைப் போல் சலுகைகளை வழங்குவது குறித்தும், விலையைக் குறைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இதில், விரைவில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

பாலாற்றின் தற்போதைய நிலை குறித்தும், குறிப்பாக அதில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின்கீழ் (சிஎஸ்ஆா்) செயல்படும் தனியாா் நிறுவனங்களைத் தொடா்பு கொண்டும், அரசால் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது குறித்தும் விவாதித்து பாலாற்றைத் தூய்மைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்களின் பிரச்னைகள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.